களரி என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரி அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகு